Sunday 27 May 2018

அனுபவ பாத்தியதையின் மூலம் நிலத்தைச் சொந்தமாக்க முடியுமா?

நாங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடமிருந்து காலி மனை வாங்கினோம். எங்களுக்கு மனை விற்றவருக்கு இந்த இடம் நிலப் பரிமாற்றத்தின் மூலம் இன்னொருவரிடமிருந்து பெறப்பட்டது. அவரும் பத்திரப் பதிவு செய்யவில்லை. நாங்களும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் தற்பொழுது அதே இடத்தில் வீடு கட்டி 7ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். முதல் நபரிடம் கேட்டால் அனுபவ பாத்தியமாக வைத்து, வீட்டு ரசீது போட்டு வாருங்கள் உங்களுக்குச் சொந்தமாகிவிடும் என்கிறார். இதற்கு ஏதாவது சட்டபூர்வமான தீர்வு உண்டா? தற்பொழுது பத்திரப் பதிவு செய்தால் பத்திரப் பதிவுக்கான தொகையை வீட்டுக்கும் சேர்த்துதான் பதிவுசெய்ய வேண்டுமா? எங்களைப் போன்று இந்தப் பகுதியில் 20 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு என்ன தீர்வு?
- ராஜா
உங்களுக்கு வாய்வழியாகக் காலி மனையினை விற்றவருக்கும் (முதலாமவர்), அவருடன் தனது நிலத்தினை பரிமாற்றம் செய்துகொண்டவருக்கும் (இரண்டாமவர்) இடையில் ஏற்பட்டுள்ள நிலப் பரிமாற்றமானது, முத்திரைத் தாளில் எழுதப்பட்டு, உரிய முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாததால், தற்போதும் நீங்கள் வீடு கட்டிக் குடியிருக்கும் அடிமனையின் உரிமையாளர் இரண்டாமவர்தான். அதனால் அந்த அடிமனையினைப் பொறுத்து முதலாமவர் வாய்வழியாக உங்களுக்குச் செய்த விற்பனை சட்டப்படி செல்லாது. ஏழு ஆண்டுகளாக நீங்கள் வீடு கட்டி அனுபவித்து வருவதாலும், அனுபவ பாத்தியதையைக் கொண்டு மேற்படி வீட்டினைப் பொறுத்து வீட்டு வரியினை உங்கள் பெயரில் கட்டுவதாலும் அந்த அடிமனைக்கு நீங்கள் எப்போதுமே உரிமையாளர் ஆக முடியாது. இதற்குச் சட்டபூர்வமான தீர்வு என்பது இரண்டாமவரிடமிருந்து அடி மனையினை நீங்கள் கிரையம் பெறுவதும் அந்தக் கிரையப் பத்திரத்தினைப் பதிவுசெய்வதுமே ஆகும். கிரையப் பத்திரத்தினைப் பதிவுசெய்வதற்கு அடி மனையின் தற்போதைய சந்தை மதிப்பிற்கு ஏற்றவாறு முத்திரைத் தீர்வையும் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டியதிருக்கும்.
Courtesy : Advocate Viswanathan

பவர் பத்திரம் ரத்து செய்யாமல் சொத்தைக் கிரயம் செய்ய முடியுமா?

நில உரிமையாளர் ஆனந்த் என்பவர் 1996-ம் ஆண்டு குமார் என்பவருக்கு நிலம் விற்பனைசெய்ய பவர் பத்திரம் எழுதிக் கொடுத் துள்ளார் (பவர் ஏஜெண்டாக). பிறகு நில உரிமையாளரே (ஆனந்த்) தனது கவனக்குறைவால் பவர் பத்திரம் இரத்துசெய்யப்படாமலேயே 2000-ம் ஆண்டு எனக்கு (இராமக்கவுண்டர்) அதே நிலத்தைக் கிரயம்செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் பவர் ஏஜெண்டான குமார் என்பவர் 1996-ம் ஆண்டு செய்த பவர் பத்திரம் மூலமாக 2008-ம் ஆண்டு தனது மனைவி மீது கிரயம் செய்துகொண்டு, தற்போது அந்த நிலம் எங்களுக்கு (குமார்) உரிமையானது என்கிறார். (இன்றுவரை நில உரிமையாளர் ஆனந்த் மீதுதான் பட்டா உள்ளது) தற்போது இந்த நிலம் சட்டப்படி யாருக்கு உரிமையானது?
- ஆனந்த குமார்
நில உரிமையாளர் ஆனந்த் தனக்குச் சொந்தமான ஒரு சொத்தினை விற்பனை செய்வதற்காக குமார் என்பவரைத் தனது முகவராக நியமித்து அதிகாரப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்திருந்தாலும், தனது முகவர் மூலமாக இல்லாமல் தானே நேரில் சென்று அந்தச் சொத்தை விற்பனை செய்யவும் விற்பனைப் பத்திரப் பதிவுசெய்யவும் அவருக்குச் சட்டப்படி உரிமை உள்ளது. நில உரிமையாளர் 2000-ம் ஆண்டு விற்பனைப் பத்திரம் எழுதிப் பதிவுசெய்து கொடுத்து, மேற்படி சொத்தை உங்களுக்கு விற்பனை செய்துள்ள நிலையில் அதை நீங்கள் அனுபவித்து வரும் நிலையில், நில உரிமையாளரின் முகவரான ஆனந்திற்கு மேற்படி சொத்தினை மீண்டும் வேறு யாருக்கும் விற்பனை செய்ய சட்டப்படி அதிகாரம் இல்லை. ஆகையால் அவர் நில உரிமையாளரின் முகவர் என்ற நிலையில் தனது மனைவி பெயருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனைப் பத்திரம் சட்டப்படி செல்லாது. அந்த நிலம் சட்டப்படி உங்களுக்கே உரிமையானது.
நன்றி - வழக்கறிஞர் விஸ்வநாதன்

Saturday 26 May 2018

மோட்டார் வாகனச் சட்டமும், குற்றங்களுக்கான அபராத விபரமும்...!!

மோட்டார் வாகனச் சட்டமும், குற்றங்களுக்கான  அபராத விபரமும்...!!
நாட்டிலேயே அதிக சாலை விபத்துக்கள் நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணங்களில் முக்கியமானதாக, வாகன ஓட்டிகள் சாலை விதிகளை சரிவரி கடைபிடிப்பதில்லை என்றும், பலருக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சிலர் அறியாமல் வாகனம் ஓட்டும்போது தவறுகளை செய்ய வாய்ப்புளளது. அவர்களுக்காக மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் அதில் தவறுகளுக்கான அபராத விபரங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
01. லைசென்ஸ் இல்லைன்னா...
18 வயதுக்கு உட்பட்ட மைனர் வண்டி ஓட்டுவதும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 181ன் கீழ் ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
02. அனுமதித்தாலும் குத்தம்தான்
டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பதும் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 180ன் கீழ் தவறு. இதற்கு ரூ.1000 அபராதமாகவும், மூன்று மாதங்கள் சிறை தண்டனை வழங்க வழியுண்டு.
03. ஓவர்ஸ்பீடு
அதிவேகத்தில் வண்டி ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் 183-1 ன் கீழ் ரூ.400 அபராதமாக விதிக்கப்படும்.
04. இடையூறு
போக்குவரத்திற்கு இடையூறு செய்தால் மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 201ன் படி ஒரு மணிநேரத்திற்கு ரூ.50 வீதம் அபராதம் விதிக்க முடியும்.
05. பதிவு செய்யாத வாகனம்
புதிய வாகனம் வாங்கியுடன் பதிவு செய்யவில்லை என்றால் For Regn என்று நம்பர் பிளேட்டில் எழுதியிருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், தற்காலிக பதிவு எண்ணை எழுதி ஒட்டியிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் மோட்டார் வாகனச் சட்டம் 192ன் கீழ் ரூ.5,000 வரை அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.
06. தகுதி இழந்தவர்கள்...
ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, தகுதி இழந்தவர்கள் வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனச்சட்டம் பிரிவு 182-1ன் கீழ் ரூ.500 அபராதம் விதிக்க முடியும்.
07. தாத்தா வீட்டு ரோடு
எங்க தாத்தா வீட்டு ரோடு என்ற நினைப்பிலோ அல்லது சிக்னல் நெரிசலிலோ நடைபாதையில் வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டம் RRR 177 கீழ் தவறு. இதற்கு ரூ.100 அபராதம் கட்ட வேண்டி வரும். அடுத்த முறை இதே தவறுக்கு ரூ.300 அபாராதம் விதிக்கப்படும்.
08. தாறுமாறாக ஓட்டினால்...
பிறரை அச்சுறுத்தும் விதத்திலும், விபத்தை ஏற்படுத்தும் விதத்திலும் அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184ன் கீழ் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
09. மொபைல்போன் பேச்சு
மொபைல்போன் பேசியபடி ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177ன் கீழ் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.  தொடர்ந்து இதே தவறை செய்தால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
10. செல்லமெல்லாம் வீட்டோட...
வளர்ப்பு பிராணிகளை காரில் செல்லும்போது அவை பிற வாகன ஓட்டிகளுக்கோ அல்லது டிரைவருக்கோ அச்சத்தை கொடுக்கும் வகையில் இருந்தால் மோட்டார் வாகனச் சட்டம் 177/80 ன் கீழ் அவை தவறு. இதற்கு ரூ.100 அபராதம் விதிக்கலாம்.
11. உடல் தகுதி
உடல் நிலை அல்லது மன நிலை சரியில்லாத நிலையில் வாகனத்தை ஓட்டுவது பிரிவு 186ன் கீழ் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
12. ஸ்ட்ரீட் ரேஸ்
போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 189ன் கீழ் ரூ 500 அபராதம் அல்லது ஒரு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அபராதமும், சிறைத் தண்டனையும் சேர்த்தும் விதிக்கப்படலாம்.
13. கரும்புகை வெளிட்டால்...
கொசு மருந்து அடிப்பது போன்று புகையை வெளியிடும் வாகனங்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம் 177/139(1)ன் கீழ் தவறு. இதற்கு முதல்முறை ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
14. குடிபோதையில் டிரைவிங்
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தவறு. அவ்வாறு ஓட்டுபவர்களுக்கு முதல்முறை ரூ.2,000 அபராதமும், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க முடியும். இரண்டாவது முறை தவறுக்கு ரூ.3,000 அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்க வழியுண்டு.
15. மியூசிக் ஹாரன்
வாகனங்களில் அனுமதிக்கப்படாத காற்று ஒலிப்பான் மற்றும் பல்லிசை ஒலிப்பான் பயன்படுத்துவது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 190 (2)ன் கீழ் ரூ.100 அபராதம் விதிக்க முடியும். தொடர்ந்து செய்தால் ரூ.300 வரை அபராதம் விதிக்கப்படும்.
16. இன்ஸ்யூரன்ஸ் இல்லாமல்...
காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 196ன் படி ரூ.1000 அபராதம் விதிக்க முடியும்.
17. பாட்டு போட்டாலும் குற்றமே
கார்களில் ஆடியோ சிஸ்டத்தை ஒலிக்க விட்டு ஓட்டுவதும் குற்றமே. இதற்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.
18. ஹை-பீம்
ஹெட்லைட் ஹெட்லைட்டில் விதவிமான வண்ணம் கொண்ட பல்புகளை ஒளிரவிட்டுச் செல்வதும் தவறு. மோட்டார் வாகனச் சட்டம் 177/7(2) ன் படி ரூ.100 அபராதம் விதிக்கலாம். அடுத்தடுத்த முறை தவறுக்கு ரூ.300 அபாராதம் விதிக்க முடியும்.

பவர் பத்திரம்

பவர் பத்திரத்தின் அதிகாரம் என்ன?
================================
பவர் பத்திரம் மூலம் ஒருவர் தன்னுடைய முகவருக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்களைத் தன் சார்பாகச் செயல்பட வழங்க முடியும். இப்படி பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை முதன்மையாளர் (Principal) என்று சொல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதன்மையாளர் மட்டும் பவர் பத்திரத்தில் கையெழுத்துப் போட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது பவர் பத்திரத்தில் முதன்மையாளர் கையெழுத்து மட்டுமல்ல, அவர் நியமிக்கும் முகவரும் கையொப்பம் இட வேண்டிடும் கட்டாயம்.
பவர் பத்திரத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, பொது அதிகாரப் பத்திரம், அடுத்தது, குறிப்பிட்ட அதிகாரப் பத்திரம். ஒரு வேளை பவர் பத்திரத்தில் காலத்தைக் குறிப்பிடாமல் இருந்தால், அந்த பவர் பத்திரத்தை முதன்மையாளர் ரத்து செய்யும் வரை செல்லும். அதேசமயம் முதன்மையாளர் இறந்துவிட்டால் பவர் பத்திரம் தானாகவே காலாவதியாகிவிடும். சில மாநிலங்களில் பவர் பத்திரத்தில் பின்பற்றப்படும் விசேஷ அம்சங்கள்:
தமிழ்நாடு
============
2010 நவம்பர் முதல் பவர் பத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் புத்தகம் 1-ல் பதிவுசெய்யப்படுகிறது (முன்பு இது டீழுழுமு ஐஏ-ல் பதிவு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது).
இதன்மூலம் நவம்பர் 2010-க்குப் பிறகு பதிவு செய்த பவர் பத்திரத்தின் விவரங்கள், தமிழ் நாட்டின் சொத்து வில்லங்கச் சான்றிதழில் இடம் பெறுகின்றன. இந்த அம்சம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் செயலில் உள்ளது.
ஆந்திரப்பிரதேசம்
===============
இந்தியாவிலே ஆன்லைன் மூலம் பவர் பத்திரத்தின் விவரங்களைச் சரி பார்க்கும் முறை ஆந்திராவில் மட்டும் உள்ளது.
ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட முதன்மையாளரின் பெயர், முகவரின் பெயர், சொத்தின் விவரங்கள், பவர் பத்திர எண், தேதி மற்றும் அந்த பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களின் விவரங்களைச் சரி பார்க்கலாம். இந்தச் சேவை தெலங்கனா மாநிலத்திலும் நடைமுறையில் உள்ளது.
மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர்
==================================
மத்தியப் பிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட சொத்தின் மேல் பவர் பத்திரம் வழங்கினால் அது ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதே போல் சட்டீஸ்கரில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
பவர் பத்திர அம்சங்கள்
====================
1. சொத்து சம்பந்தமாக பவர் பத்திரம் வழங்கினால், அதில் குறிப்பிட்ட முத்திரைத் தீர்வு மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
2. முதன்மையாளர் மற்றும் முகவரின் கையெழுத்து, புகைப்படம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
3. முதன்மையாளாரின் சொத்து உரிமை சரி பார்க்கப்பட வேண்டும் மற்றும் முதன்மையாளாரின் வருவாய், வருவாய்த் துறையினரால் வழங்கப்பட்ட நில உரிமைச் சான்றிதழும் சரிபார்க்கப்பட வேண்டும்.
4. பவர் பத்திரம் மூலம் பதிவு செய்யும் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் முதலில் அந்த பவர் பத்திரம் ரத்து ஆகவில்லை என உறுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் முதன்மையாளர் உயிருடன்தான் உள்ளார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. முகவருக்கு பவர் பத்திரத்தில் விற்கும் உரிமை அளிக்கப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
6. ஒரு வேளை பில்டர் சொத்தின் உரிமையாளராக இருந்தால், சில சமயங்களில் தங்களின் ஊழியர்களுக்கு பவர் பத்திரத்தை அளிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் அந்த பில்டரிடம் இது சரிதானா என உறுதி செய்துகொள்ள வேண்டும்.
7. ஒரு வேளை முதன்மையாளர் வெளிநாட்டிலும்,  அவரது முகவர் இந்தியாவிலும் இருந்தால் அந்த பவர் பத்திரம் நோட்டரி அல்லது சம்பந்தப்பட்ட அந்த நாட்டில் உள்ள இந்திய வெளியூறவுத்துறை  அதிகாரிகளின் முன்னிலையில் முதன்மையாளர் பவர் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும். பவர் பத்திர முதன்மையாளர் இந்தியாவில் வசிக்கும் முகவருக்கு அதை தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். முகவர் அந்த பவர் பத்திரத்தைச் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் 120 நாட்களுக்குள் (adjudicate) பதிவு செய்ய வேண்டும் அதன் செய்த பிறகுதான் வெளிநாட்டில் வாழும் முதன்மையாளர் வழங்கப்பட்ட பவர் பத்திரம் இந்தியாவில் செல்லுபடியாகும்.
8. கிரயப் பத்திரம் பதிவு செய்யும் முன், அசல் பவர் பத்திரத்தைச் சரி பார்க்க வேண்டும். பவர் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்றும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்

Locus standi என்றால் என்ன?


நீதிமன்றம் தொடர்பான சில செய்திகளில் ‘locus standi’ என்ற வார்த்தை இடம்பெறுகிறது. இதன் பொருள் என்ன என்பது தெரியுமா?

நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரிக்க வே​ண்டுமென்றால் வாதிக்கு locus standi இருக்க வேண்டும்.

ராகவன் என்பவர் குமார் என்பவரை அடித்தார் என்றால் வெறும் பார்வையாளரான கேசவன் என்பவர் ராகவன் மீது வழக்கு தொடுக்க முடியாது. ஏனென்றால் கேசவனுக்கு இதில் locus standi இல்லை.

ஒரு சட்டம் தவறானது என்று நீங்கள் வழக்கு தொடுத்துவிட முடியாது - அந்தச் சட்டம் உங்களை பாதித்திருந்தாலொ​ழிய. ஒரு செயல் அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீங்கள் வழக்கு தொடுத்தால் அந்தச் செயலால் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் அந்த வழக்கை எடுத்துக்கொள்ளாது. ஏனென்றால் உங்களுக்கு locus standi இல்லை. (இருதார மணம் சட்ட மீறல். என்றாலும் யாராவது இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் முதல் மனைவி மட்டும்தான் கணவன்மீது வழக்கு​ தொடுக்கலாமே தவிர பிற உறவினர்களோ பொது மக்களோ அல்ல. ஏனென்றால் அவர்களுக்கு locus standi இல்லை என்று வாதிடப்படும்.)

Saturday 12 May 2018

வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ? பொது நல வழக்கு போடுவது எப்படி ?

பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும். இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும். அதன் பின்பு, பத்து பேர் வழக்கு போடுவதாக இருந்தால் அவர்கள் பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, வாதிகள் என்று காண்பியுங்கள். அதன் பின்பு, எதிரிடை என்று போட்டு, எதிர் பார்ட்டி நபர்கள் பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, பிரதிவாதிகள் என்று காண்பியுங்கள். இதன் பெயர், short cause title எனப்படும்.சிவில் வழக்கில், பிராதை, ஆர்டர் 7, விதி 1 இன் கீழேயே தாக்கல் செய்ய முடியும். ஆகையால், இப்போது, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும், பிராது, ஆர்டர் 7, விதி 1 என்று, நடு மையத்தில் எழுதுங்கள். அதன் பின்பு, வாதிகளின் விலாசம் என்று, தலைப்பிட்டு, வாதி வசிக்கும் மாவட்டம், ஊர், தெரு, கதவு இலக்கம், மற்றும், ஹிந்து என்றால், ஹிந்து என்றும், அப்பா பெயர், வயது, அதன் பின்பு, வாதியின் பெயர் என எழுதுங்கள். பல பேர் இருந்தால், வரிசையாக ஒன்று, இரண்டு என எழுதுங்கள். அதன் பின்பு, வாதிக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று எழுதுங்கள். அதன் பின்பு, பிரதிவாதிகளின் விலாசம் என்று தலைப்பிட்டு, மேலே சொன்னது போல, வாதிகளின் முகவரி போலவே, எழுதி கொள்ளுங்கள். அதன் கீழ், பிரதிவாதிகளுக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று குறிப்பிடுங்கள். இதன் பெயர் லாங் cause டைட்டில் ஆகும். இப்போது, அடுத்த பாராவாக, நீதிமன்ற jurisdiction குறிக்க வேண்டும். நீங்கள் வழக்கு போடும் ஊர், தாவா நீதிமன்ற எல்லைக்குட்பட்டதால், இந்த வழக்கு இங்கு தாக்கல் செய்யபடுகிறது என்று எழுதுங்கள். ஒவ்வொன்றும் ஒரு பாரா ஆகும். இப்போது மூன்று பாரா முடிந்திர்க்கும். . வழக்கு போடுபவர், வாதி என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். வழக்கின் எதிராளி, பிரதிவாதி ஆவார். யார் மேல் பரிகாரம் கோருகிறீர்களோ, அவர்கள் அனைவரையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். அடுத்த பாரா, வழக்கு விவரங்களை ஆரம்பியுங்கள். வாதியானவர், இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இப்படி, வழக்கின் சாராம்சத்தை, சுருக்கமாக, பல பாராக்களாக பிரித்து எழுதுங்கள். உதாரணமாக, பொது பாதை, இவ்வளவு நாளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது, இன்ன நபர், அதை ஆக்கிரமித்துள்ளார். இதனை தெரிவித்து, எதிர் மனுதாருக்கு, இந்த தேதியில் வாதியால் மனு, பதிவு தபாலில் அனுப்ப பட்டது. அதை பெற்று கொண்டு, இன்று வரை, பிரதிவாதிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், காலம் கடத்தி வருகின்றனர். இவ்வாறாக, உங்கள் கரு பொருளை மையபடுத்தி, பிராது விவரங்களை சொல்லுங்கள். நீங்கள் அனுப்பிய மனுவின் நகலை தாக்கல் செய்தால், ஒன்றாம் பிரதிவாதிக்கு அனுப்பிய மனு, தபால் ரசீது ஆகியவை வாதி தரப்பு ஒன்றாவது சான்றாவணம் ஆகும் என்று குறிப்பிடுங்கள். சட்ட பாயிண்ட் களையும், குறிப்பிடுங்கள். அதன் பின்பு, அடுத்த பாராவாக, உங்கள் வழக்கின் வியாச்சிய மூலத்தை எழுதுங்கள். அதாவது, எந்த தேதியில் ஆக்கிரமிப்புதாரர் ஆக்கிரமித்தார், எப்போது பிரதிவாதிகளுக்கு மனு செய்யப்பட்டது, இன்று வரை பிரதிவாதிகள் வீண் காலம் கடத்தி வருகிறார்கள், மற்றும், வாதி இருக்கும் ஊர், பிரதிவாதி இருக்கும் ஊர், வழக்கு சொத்து இருக்கும் ஊர் ஆகியவற்றை சொல்லி, இதில் உற்பத்தி என்று காண்பியுங்கள். இது தனி பாரா. அடுத்து, வாதி, நீதிமன்ற கட்டணமாக TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள். அதன் பின்பு, prayer. இதில், நீங்கள் என்ன பரிகாரம் கூறுகிறீர்கள், யார் மீது கூறுகிறீர்கள் என்று சொல்லுங்கள். உதாரணமாக, ஒன்றாம் பிரதிவாதி, பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், ஒன்றாம் பிரதிவாதியை, இரண்டு, மூன்று பிரதிவாதிகள் தாவா பொது இடத்தில் இருந்து அகற்ற, உத்தரவிடும் படிக்கும். அதன் பின்பு, வாதிக்கு, பிரதிவாதிகள் வழக்கிடை செலவை தரும்படிக்கும், மற்றும், நீதிமன்றம் கருதும் இன்ன பிற பரிகாரங்களை வழங்கும்படிக்கும், பிரார்திக்கபடுகிறது என்று முடியுங்கள். இதில், அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால், பிரிவு என்பது, சிவில் procedure code படி, வழக்கு தொடுப்பதற்கு தொண்ணூறு நாட்களுக்கு முன் அறிக்கை அனுப்ப வேண்டும். அவசரமாக, இந்த வழக்கை தாக்கல் செய்தால், exemption மனு, பிரிவு, 80(2), civil procedure code படி, தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு, இந்த பிராதுடன் தாக்கல் செய்திருப்பதாக, பிராதில், சொல்லுங்கள். இப்போது, இடது பக்கம் வழக்கறிஞர் கையொப்பமும், வலது பக்கம் வாதிகள் கையொப்பமும் போட வேண்டும். அதன் பின்பு, பிராதை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்று, particulars ஒப் valuation என்று தலைப்பிட்டு, சொத்து மார்க்கெட் மதிப்பு காட்டுங்கள். அதன் பின்பு,TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள். அதன் பின்பு, சரி பார்த்தல் என்று தலைப்பிட்டு, மேலே கண்ட சங்கதிகள் எல்லாம் என் அறிவிற்கு எட்டிய வரை உண்மை என சொல்லி, மதுரையில் வைத்து, தேதியில் கை எழுத்திட்டேன் என சொல்லுங்கள். அதன் பின்பு, சொத்து விவரம் எழுதுங்கள். கிரைய பத்திரத்தில் சொத்து விவரம் கொடுத்திருப்பார்களே, அந்த மாதிரி. அதன் பின்பு, மீண்டும், சரி பார்த்தல் என்று மேலே சொன்னவாறு, எழுதுங்கள். அதன் பின்பு, மேலே சொன்ன short cause title எழுதி, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள், ஆர்டர் ஏழு, விதி பதினான்கின் படி என்று தலைப்பிட்டு, நான்கு column கட்டமிட்டு கொள்ளுங்கள் முதல் column இல், வரிசை என், அடுத்த column இல் ஆவன தேதி, அடுத்த column இல் ஆவன விவரம், அடுத்த column இல் ஆவன தன்மை, அது நகலா அல்லது அசலா என்று காண்பியுங்கள். இப்போது, உங்கள் கைவசம் உள்ளல ஆவனங்களை, வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதன் கீழ், இடது பக்கம், ஊர், தேதியும், வலது பக்கம், வழக்கறிஞர் என்று காண்பியுங்கள். வழக்கறிஞர் இல்லாவிட்டால், வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அசல் ஆவநங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுங்கள். அது முடியாவிட்டால், சான்றிட்ட நகல் தாக்கல் செய்யலாம். அதுவும் இல்லாவிட்டால், நகலை தாக்கல் செய்யலாம். ஆனால், விசாரணை வரும்போது, அசல் அல்லது சான்றிட்ட நகலைத்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதை, பின்பு கொடுப்பதாக குறிப்பில் காண்பிக்கலாம். இந்த ஆவண பட்டியல் தனி தாளில் தயார் செய்து, பிராதுடன் இணைக்கலாம். இப்போது பிராது தயார். இதனுடன், நீங்கள் வழக்கறிஞர் வைத்தால், வக்காலத்து வைக்க வேண்டும். அதன் பின்பு, ஆவணங்களை, ஒரு தனி தாளில் டாக்கட் போட்டு, தைத்து, அசல ஆவணங்கள தவிர, மற்றவற்றிற்கு, ஐந்து ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டி கொடுங்கள். பிராதின், முதல் பக்கத்தில், valuation சீட் வைக்க வேண்டும். அதன் பின்பு, நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர், அதன் கீழ் பிராது வைத்து தைத்து கொள்ளுங்கள். உள்ளே, வக்காலத்து, ஆவணங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். சில நீதிமன்றத்தில், வாதி, பிரதிவாதி விலாசம் தனி தாளில் அடித்து வைக்க வேண்டி உள்ளது. முன்பே சொன்னது போல, short cause title எழுதி, STATEMENT U/O. VI, RULE 14-A என்று, தலைப்பிட்டு அதன் கீழ், வாதி, பிரதிவாதி விலாசங்கள் எழுத வேண்டும். அதன் பின்பு, supporting affidavit. இதுவும், short cause title எழுதி, SUPPORTING AFFIDAVIT FILED BY THE 1st PLAINTIFF ABOVENAMED U/O VI, R. 15(4) OF C.P.C. என்று தலைப்பிட்டு, அதன் கீழ், வாதியின் விலாசத்தை தலை கீழாக எழுதி, பிராதில் வாதியின் விலாசம் எழுதுவீர்களே, அது போல, ஆகிய நான், சத்திய பிரமாணத்தின் பேரில் எழுதி வைத்த அப்பிடவிட் என்று எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, நான் வழக்கின் வாதி ஆவேன். எனக்கு வழக்கு விவரங்கள் பூராவும் நன்கு தெரியும் என்று சொல்லி, அடுத்த பாராவில், சுருக்கமாக பிராதின் விவரத்தை சொல்லுங்கள். பல வாதிகள் இருந்தால், பிற வாதிகளுக்காக, இந்த அப்பிடவிட் தை தாக்கல் செய்வதாக கூறி கொள்ளுங்கள். இறுதியாக, தனி பாராவாக, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் பிராதுபடி தீர்ப்பளிக்க வேண்டும் என்று முடியுங்கள். அதன் பின்பு, இடது பக்கம், மேலே சொன்ன சங்கதிகள் யாவும் உண்மை என சொல்லி, தேதியில், என் முன்பாக, ஊரில் வைத்து கை எழுத்திட்டார் என எழுதுங்கள். வலது பக்கம், வாதியின் கையொப்பம் இடுங்கள். அதன் நடுவில், ஒரு வழக்கறிஞரின் attestation வாங்கி கொள்ளுங்கள். இப்போது supporting அப்பிடவிட் ரெடி. பிராதின் ஒவ்வொரு பக்கத்திலும், supporting affidavit ஒவ்வொரு பக்கத்திலும், வாதி கையெழுத்து வாங்க வேண்டும். அடுத்து, அரசு ஊழியர்கள் மேல் வழக்கு தொடுக்கும் முன், உரிய அறிவிப்பு அனுப்பாவிட்டால், அதற்கும் ஒரு அப்பிடவிட், மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கம் போல, short cause டைட்டில் எழுதுங்கள். இது தனி இடை நிலை மனு ஆகும். எனவே, லேசாக மாற்றி, நீதிமன்ற பெயர், ஊர் எழுதி, அதன் கீழ், இடைநிலை மனு எண் என எழுதி, இடம் விட்டு, பார் போட்டு, 2014 என வருடத்தை போட்டு கொள்ளுங்கள். இதில், வாதிகள் மனுதாரர்கள் ஆவார்கள். எனவே, வாதிகள் பெயரை எழுதி, மனுதார்கள் / வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அதே போல, கீழே, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகள் என்று, அரசு அலுவலர்களை மட்டும் சேர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் பொது நல வழக்கு போடும்போது, முதல் பார்ட்டி ஆக, ஆக்கிரமிப்புதாரரை காண்பித்து இருந்தால், இரண்டாம் பார்ட்டி ஆக, அரசு அதிகாரிகளை காண்பித்து இருப்பீர்கள். இங்கு, அரசு அலுவலர்கள் மட்டும் வருவதால், அவர்களை, இம்மனுவில், எதிர்மனுதார்களாக காண்பிக்கும்போது, வரிசையாக காண்பித்து, அவர்கள் முக்கிய வழக்கில் எந்த cadre ஒ, அந்த cadre காண்பியுங்கள். உதாரணமாக, மாவட்ட ஆட்சியர், முக்கிய வழக்கில் இரண்டாம் பிரதிவாதி என்றால், இங்கு, முதல் எதிர்மனுதாராக காண்பித்து இருந்தால், முதல் எதிர்மனுதார் / இரண்டாம் பிரதிவாதி என்று காண்பியுங்கள். இப்போது, அப்பிடவிட் க்கு வருவோம். முதல் மனுதார் / முதல் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யும் அப்பிடவிட் என்று தலைப்பிட்டு கொள்ளுங்கள். அல்லது, எந்த மனுதார் வேண்டுமானாலும் அப்பிடவிட் தாக்கல் செய்யலாம். வழக்கம் போல, sworn செய்து கொள்ளுங்கள். அதாவது, விலாசத்தை தலை கீழாக எழுதி, ஆகிய நான் சமர்ப்பிக்கும் அப்பிடவிட் என்று காண்பியுங்கள். அடுத்து. முதல் பாரா, supporting அப்பிடவிட் இல் சொன்னது போல எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, ஒவ்வொரு சிறு பாராவாக, வழக்கு இந்த அரசு அதிகாரிகள் மீது உடனே தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களுக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பை, அனுப்ப முடியவில்லை என்று பொருத்தமான காரணத்தை காண்பியுங்கள். இறுதியாக, தனி பாராவில், இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு பெருத்த இழப்பு ஏற்படும். ஆனால், எதிர்மனுதாருக்கு எவ்வித ஆட்சேபனையும் இம்மனு தாக்கல் செய்ய இருக்க போவதில்லை என்று எழுதி கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள். இங்கும், supporting அப்பிடவிட் இல் இருப்பது போல முடித்து கொள்ளுங்கள். அப்பிடவிட் ரெடி. இப்போது மனு. இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட் short cause title அதே போல எழுதி கொள்ளுங்கள். மனுதார் / வாதி தரப்பு மனு பிரிவு 80(2) c.p.c. படி என்று எழுதி கொள்ளுங்கள். இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட்டில் கண்டுள்ள காரநன்களால், கணம் கோர்ட்டார் அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள். அதாவது, அப்பிடவிட் prayer உம, மனு prayer உம, ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த வழக்கை உடனடியாக தாக்கல் செய்ய, அரசு ஊழியர்களுக்கு உரிய அறிவிப்பை கொடுக்க exemption செய்ய முறையான காரணங்களை சொல்லாவிட்டால், நீதிமன்றம் உங்கள் வழக்கை உடனடியாக கோப்பிற்கு எடுக்காது. நோட்டீஸ் அனுப்பி விட்டு, மூன்று மாதம் கழித்து தாக்கல் செய்ய சொல்லுவார்கள். அடுத்து, லீவ் மனு. அதாவது, நீங்கள் பொது நல மனு தாக்கல் செய்ய, நீதிமன்றந்தில் லீவ் வாங்க வேண்டும். இது ஒரு விதமான், அனுமதி ஆகும். இதுவும், இடை நிலை மனுதான். இதற்கும் அப்பிடவிட், மனு வைக்க வேண்டும். அப்பிடவிட், ஒருமையில் இருக்க வேண்டும். அதாவது, நான், கேட்கிறேன் என்று வர வேண்டும். ஆனால், பிராதோ, வாதி, வாதி கோருகிறார் என்று அந்த நடையில் வர வேண்டும். ஒரு பொதுவான நலத்திற்கு எல்லா நபர்களுக்கும் ஒரே நபரே வழக்கு நடத்த, நீதிமன்றம் அனுமதி கொடுக்க வேண்டும். அதற்குதான், இந்த மனு. வழக்கம் போல, அப்பிடவிட், இதில் நீங்கள் ஏன் ஒரு நபரே இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று காரணம் கூற வேண்டும. அதே போல மனுவை, ஆர்டர் 1, விதி 8 இன் படி தாக்கல் செய்ய வேண்டும். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், இவ்வழக்கில் ஒன்றாம் வாதியே, பிற வாதிகளுக்காக, இந்த வழக்கை நடத்த, உத்தரவிட வேண்டியது, அவசியமாயும், நியாயமான்யும் உள்ளது என முடியுங்கள். ஒவ்வொரு இடை நிலை மனுவில் இரண்டு ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டுங்கள். இதன் கீழே, படி மெமோ. அதாவது, பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் வைக்க வேண்டும். பிராது copy, நோட்டீஸ், படி மெமோ, போஸ்டல் கவர் மற்றும், அஞ்சல் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும். ஒரு எதிர்பார்ட்டி க்கு உள்ளூர் என்றால் ஐந்து ரூபாய் மற்றும் போஸ்டல் ஸ்டாம்ப் முப்பத்தைந்து ருபாய் ஒட்டுங்கள். பிரதிவாதி குடி இருப்பது வேறு நீதிமன்றம் மூலம் போகும் என்றால், கூடுதலாக பத்து ரூபாய், ஒரு நபருக்கு ஓட்டுவது நல்லது, நீதிமன்ற வில்லை. பிராதுக்கு ஒரு டாக்கட் வாங்கி வைத்து, கூடுதலாக நான்கு பச்சை காகிதங்கள் பிராதின் அடியில் வைத்து, பிராது டாக்கட், அதன் மேல் நான்கு கூடுதல் ஷீட்ஸ், அதன் மேல் பிராது, அதன் மேல் கோர்ட் பீஸ், அதன் மேல் valuation சீட் வைத்து தைத்து கொள்ளுங்கள். இப்போது, எல்லாம் தயார். இனி, இந்த வழக்கை இன்றே, நீதிமன்றம் கோப்பிற்கு எடுக்க வேண்டுமானால், emergent மனு மற்றும் அப்பிடவிட் வைக்க வேண்டும். இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் மனுவில் ஒட்டுங்கள். இதை மேலே வைத்து, காலை பத்து முப்பதுக்கு நீதிபதியிடம் சமர்ப்பியுங்கள். இதில், வழக்கு முடியும்வரை, உருத்து கட்டளை வேண்டும் என்றால், அதற்கு தனி அப்பிடவிட், மனு. மனு ஆர்டர் 39, விதி 1 இன் படி. அப்பிடவிட், வழக்கம் போலதான். அதில் கூடுதலாக, இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு இழப்பு ஏற்படும். எனக்கு prima facie case and balance of convenience உள்ளது என சேர்த்து கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், எதிர்மனுதார் / பிரதிவாதி, வழக்கு முடியும்வரை, தாவா சொத்தை பயன்படுத்தக்கூடாது என இடைக்கால உருத்து கட்டளை வழங்கும்படிக்கும்,அதன் தொடர்ச்சியாக, இன்று, ஒரு exparte ad-interim injunction இம்மனு முடியும்வரை தரும்படிக்கும், பிரார்த்திக்கபடுகிறது. இதில் ஒவ்வொரு இடை நிலை மனுவுக்கும், படி மெமோ வைக்க வேண்டும். dispense வித் மனுவுக்கு மட்டும் தேவை இல்லை. படி, பிராதில் சொன்ன படிதான். ஒரு நபருக்கு ஐந்து ரூபாய். முடிந்தால், ஒரு வழக்கறிஞரிடம் ரெடி செய்து வாங்கி கொள்ளுங்கள். அல்லது நீங்கள் தயார் செய்து, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து கொள்ளுங்கள். அதன் பின்பு, file செய்வது நல்லது. இது ஒரு மாதிரியே. இதில் நீங்கள் வழக்கை நன்றாக சட்டப்படி எழுதினால்தான், வழக்கு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஒரே நாளில் நம்பர் ஆகி விடும், சரியாக இருந்தால். இடைக்கால உறுத்து கட்டளையும், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. அசல் ஆவணங்களை வைத்தால், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு அப்பிடவிட், மனு ஆகியவற்றுக்கும் டாக்கட் போட்டு கொள்ளுங்கள்.
நல்வாழ்த்துக்கள்

பத்திர பதிவு அலுவகங்களில், மோசடி செய்தால் என்னென்ன தண்டனைகள் ?

பத்திர பதிவு அலுவகங்களில், மோசடி செய்தால் என்னென்ன தண்டனைகள் ?
அரசு ஊழியர் :
பதிவு ஏடுகளில் திருத்தல், சேர்த்தல் போன்ற மோசடிகள் செய்யும் அரசு ஊழியருக்கு மூன்று ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும்காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படலாம் - இந்திய தண்டனை சட்ட பிரிவு 167 - (ஏழு ஆண்டுகள் வரை - பதிவு சட்டம் பிரிவு 81)
பொதுமக்கள் :
பதிவின் பொது பதிவாளர் முன் பொய் வாக்கு மூலம் கொடுத்தல், போலி தகவலை எழுதுதல், போலி ஆவணம் வரைபடம் தாக்கல் செய்தல், ஆள் மாறாட்டம் செய்வது போன்ற குற்றங்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சாதாரண அல்லது கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். (இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 191,192,193,419,467,471 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82)
ஆள் மாறாட்டம் –
தன்னை பத்திர பதிவு செய்தவர் என்று கூறி நடித்து பத்திரத்தை திரும்ப வாங்கி செல்வதும் ஆள் மாறாட்ட குற்றம்தான் –
(பேரரசர் எதிர் கௌசல்யா, 5. பாம்பே எல். ஆர் 138 )
சாட்சி உடந்தை –
வேறு ஒருவராக பதிவு அலுவலகத்தில் நடிப்பவரை உண்மையானவர் என அடையாளம் காட்டும் சாட்சியும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனைக்குரியவர்.
(நீலகாந்தாராவ் சந்தாப்புல் எதிர் பேரரசர் – ஏ ஐ ஆர் 1922 – நாக்பூர் 86)
நல்ல உள்நோக்கம் இருந்தாலும் குற்றம், குற்றமே !
நல்ல உள்நோக்கத்துடன் ஒருவர் வேறு ஒருவர் போல் நடித்தாலும், அது குற்றம்தான். பிரிவு 82 இன் கீழ் தண்டிக்கப்பட கெட்ட உள்நோக்கம் (motive) அவசியமில்லை. ஆள்மாறாட்டம் மட்டுமே போதுமானது –
(அரசி எதிர் லூத்திபேவா, 2 பெங்கால் எல் ஆர் 25 கிரிமினல் )
சகோதரி வேடம் :
ஒரு பெண்ணுக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். முதாலமவர் சொத்தினை அபகரிக்க மற்ற இருவரும் விற்பனை ஆவணம் தயாரித்தனர். அதில் ஒருவர் முதலாமவர் போல் நடித்து ஆவணம் பதிவு செய்யப்பட்டது. இந்த இருவருக்கும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 மற்றும் பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் தண்டனை வழங்கப்பட்டது
(கங்கா திவ்யா எதிர் பேரரசர், ஏ ஐ ஆர் 1943 பாட்னா 227 @ பக்கம் 229)
கொடிது கொடிது உடந்தை கொடிது :
பதிவு சட்டம் பிரிவு 82 இன் கீழ் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பவர் அவரை ஏவி விட்டவரை விட கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – (அரசி எதிர் பிரசாத் ஜெயின் 8 W.R. (Cr) 16)
போலிகள் உருவாக்கத்துக்கு ஆயுள் தண்டனை -
பண மதிப்புள்ள படிவ வடிவிலான அவ்வனங்களுக்கும் உயில்கள், தத்து அதிகார ஆவணங்கள் ஆகியவற்றுக்கும் நேரடி போலி ஆவணங்கள் அல்லது மின்னணு வடிவ போலி ஆவணங்கள் தயாரிப்பவர்களுக்கு பத்தாண்டுகள் வரை அல்லது ஆயுள் தண்டனை வரை சாதாரண, கடும் காவல் தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் – இந்திய தண்டனை சட்டம் பிரிவு 467 தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000)